மியன்மார் சைபர் குற்ற முகாமில் பலவந்தமான முறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்கள் சிலர் நேற்றிரவு நாடு திரும்பினர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக வருகை தந்தவர்களில் 16 ஆண்களும் 4 பெண்களும் உள்ளடங்குகின்றனர். சர்வதேச புலம்பெயர்வுக்கான நிறுவனமொன்றினால் குறித்த தரப்பினர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அவர்கள் மியன்மாரிலிருந்து தாய்லாந்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.