நாட்டின் பல பகுதிகளில் இன்று இரவு மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இரவில் மழை பெய்யும் சாத்தியமுள்ளது. அத்துடன் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் மணித்தியாலத்திற்கு 45 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.