ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேல்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதிகளான கே.எம்.ஜீ.எச்.குலதுங்க, டி.கொடவத்த, ஆர்.ஏ.ரணராஜா மற்றும் முன்னாள் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் எம்.சீ.எல்.பீ.கொபல்லவ ஆகியோர் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர். அரசியல் யாப்பின் 107வது யாப்பிற்கமைய இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.