பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெம்பியன் தோட்ட மேற்பிரிவில் வசிக்கும் 13வயது சிறுமியொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் அவரது தந்தை கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சிறுமியின் தாய் கொழும்பில் வீடொன்றில் பணிப்பெண்ணாக கடமையாற்றும் நிலையில் விடுமுறைக்கு வீட்டிற்கு சென்றிருந்த போது தாயிடம் குறித்த சிறுமி இது தொடர்பில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பொகவந்தலாவை பொலிசில் சிறுமியின் தாய் முன்வைத்த முறைப்பாட்டிற்கமைய தந்தை கைதுசெய்யப்பட்டுள்ளார். சிறுமியை டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.