தேயிலை கொழுந்து பறிந்துகொண்டிருந்த தொழிலாளர்கள் சிலர் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கர்கஸ்வோல் தோட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குளவிக் கொட்டுக்க இலக்கான ஐவர் தோட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் வீடு திரும்பியுள்ளனர். அதிக பாதிப்புக்கு உள்ளான இருவர் பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.