கால்பந்தாட்ட வரலாற்றில் 900 கோல்களை அடித்த முதலாவது வீரர் என்ற சாதனையை நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ படைத்துள்ளார். ஐரோப்பிய நேசன்ஸ் கிண்ண கால்பந்தாட்ட தொடரில் க்ரோஷியாவுடன் இடம்பெற்ற போட்டியில் ரொனால்டோ கோல் அடித்தார்.
இது அவரின் 900வது கோலாகும். இதனையடுத்தே குறித்த சாதனையை அவர் நிலைநாட்டியுள்ளார். குறித்த போட்டியில் ரொனால்டோவின் அணி 2 – 0 என வெற்றிபெற்றது. அவர் தனது நாட்டின் அணி சார்பில் பெற்றுக்கொண்ட 131வது கோல் இதுவாகும்.
கழக மட்டத்திலான அணிகளிலும் ரொனால்டோ போட்டியிட்டுள்ளார். அந்தவகையில் Sporting Lisbon, Manchester United, Real Madrid, Juventus ஆகிய கழக மட்ட அணிகளில் கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடியுள்ளதுடன் தற்போது சவுதி அரேபியாவின் Al-Nassr ச என்ற கழக அணியில் அவர் விளையாடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
900வது கோலை அடித்ததன் பின்னர் ரொனால்டா மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மைதானத்தில் முழங்காலிட்டு அழுதார். விளையாடுகின்றார். போர்த்துக்கல் நாட்டின் கால்பந்தாட்ட வீரரான 39 வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது 17வது வயதில் முதல் கோலை அடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.