கென்யாவில் பாடசாலையொன்றில் ஏற்ப்பட்ட பாரிய தீ விபத்தில் 17 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். பாடசாலை விடுதியில் தங்கியிருந்த மாணவர்களே அனர்த்தத்தில் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் தீக்காயங்களுக்கு உள்ளான பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மத்திய கென்யாவிலுள்ள நயேரி பகுதியிலுள்ள பாடசாலையில் தீ விபத்து ஏற்ப்பட்டுள்ளது.