போலி 5,000 ரூபாய் நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது நேற்றிரவு (06) செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 44 வயதுடைய ஹெனேகம, அக்குரஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிசார் தெரிவித்தனர்.
தெமட்டகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேலுவன வீதி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தெமட்டகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.