தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள புழுயுவ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் கோட் திரைப்படத்தின் முதல் காட்சி வெளியிடப்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் கேரளா மாநிலத்தில் அதிக திரையரங்குகளில் திரையிடப்படும் வேற்று மாநிலப்படம் எனும் சாதனையை GOAT படைத்துள்ளது.
தளபதி விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ளதுடன் அவருடன் இணைந்து மீனாக்ஸி சௌத்ரி, மாளவிகா சர்மா, பிரசாந்த், ராகவா லோரன்ஸ், பிரபு தேவா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர்.
இது விஜயின் 68வது திரைப்படமாகும். வெங்கட் பிரபு படத்தை இயக்கியுள்ளதுடன் யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்துள்ளார். 300 முதல் 400 கோடி இந்திய ரூபாவில் GOAT திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.