தணமல்வில பகுதியில் பாடசாலை மாணவியொருவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் வெல்லவாய நீதவான் நீதிமன்றில் இன்று மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டனர்.
சந்தேக நபர்களக்கு எதிராக நீதிமன்ற வளாகத்தில் எதிர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. பிரதேசத்திலுள்ள மகளிர் அமைப்புகள் இணைந்து இதனை ஏற்பாடு செய்துள்ளன.
சந்தேக நபர்களான 17 மாணவர்கள் உட்பட தவறுக்கு துணைபோனதாக குற்றம் சுமத்தப்படும் பெண்ணொருவரும் இவ்வாறு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.