டெங்கு நோய்த்தாக்கம் அதிகரித்து வருவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார். இந்த நிலை தொற்றாக மாறும் அபாயம் நிலவுவதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டின் அரசியல் சூழலில் அவதானம் செலுத்தாது, தமது சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் டெங்கு பரவும் வகையில் காணப்படும் பகுதிகளை சுத்தம் செய்வது தொடர்பிலும் அவதானத்துடன் இருக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார.
ஜனாதிபதி தேர்தலுக்கு அதிக இடமளித்து டெங்கு நோய் பரவுவது தொடர்பில் கவனம் செலுத்தாவிட்டாலம் மக்கள் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடுமென பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.