கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரந்தன் ஏ-9 வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்றிரவு 8 மணியளவில் விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டள்ளது. விபத்து தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.