ஜனாதிபதி வேட்பாளர்களின் உருவப்படத்தை பயன்படுத்தி AI தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட பல காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டுள்ளன.
குறித்த காணொளிகளின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து அவற்றை சமூக ஊடகங்களிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்காவிட்டால் தேர்தலின் இறுதி பெறுபேறுகளுக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்க முடியாத நிலை உருவாகுமென உண்மைக்கு புறம்பான தகவல்களுக்கு எதிரான ஒன்றியம் அறிவித்துள்ளது.
இதனால் உண்மையை அறிந்துகொள்ளும் மக்களின் உரிமையை பாதுகாத்து AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள காணொளிகளின் உண்மையை தன்மையை உறுதிப்படுத்துவதற்கும் முன்வந்துள்ள நிறுவனங்களுடன் இணைந்து இதனை மேற்கொள்ள வேண்டுமெனவும் குறித்த ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன் ஜனாதிபதி வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் கட்சிகளை மேற்கோள்காட்டி பல போலி தகவல்கள் மக்கள்மயப்படுத்தப்பட்டு வருகிறது அது குறித்தும் அவதானத்துடன் இருக்குமாறு உண்மைக்கு புறம்பான தகவல்களுக்கு எதிரான ஒன்றியம் தெரிவித்துள்ளது.