இன்றைய பாராளுமன்ற அமர்வின் இரண்டாம் வாசிப்பின் போது 3 சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
பரஸ்பர அங்கீகாரம், பதிவு செய்தல் மற்றும் வெளிநாட்டு தீர்ப்புகளை அமுல்படுத்தும் சட்டமூலம், குற்றவியல் நடைமுறைச் சட்டமூலம் உட்பட தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச தேசிய அடிப்படை சம்பள சட்டமூலம் திருத்தங்கள் இன்றி நிறைவேற்றப்பட்டுள்ளன.
இன்று காலை 10.30 முதல் மாலை 4.40 வரை குறித்த சட்டமூலங்கள் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் இடம்பெற்றது.