உக்ரைனின் போல்டாவா நகர் மீது ரஷ்யா இரு ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதில் 41 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வொல்டிமீர் ஷெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
தாக்குதல்களினால் மேலும் 180 பேர் காயமடைந்துள்ளனர். போல்டாவா நகரிலுள்ள கல்வி நிறுவனம் மற்றும் வைத்தியசாலையொன்றும் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.