15 அடி நீளம்கொண்ட திமிங்கிலம் பாணதுறை கடலில் இன்று காலை கரையொதுங்கிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இதன் எடை 2000 கிலோ என மதிப்பிடப்பட்டுள்ளது.
திமிங்கிலத்தின் உடலில் கீறல் காயங்கள் இருப்பதாக பொலிஸ் உயிர்காப்பு பிரிவு தெரிவித்துள்ளது. திமிங்கிலம் கரையொதுங்கி சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளது.
ஆண் திமிங்கிலமொன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளது. இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அத்திடிய வனப்பாதுகாப்பு அலுவலகம் மற்றும் நாரா நிறுவனத்துடன் இணைந்து பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.