தனது மனைவி இன்னொருவருடன் தகாத உறவு ஏற்படுத்திக் கொண்டு தன்னை விட்டு சென்றதாக கூறி , நபர் ஒருவர் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள மரத்தில் ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் செவ்வாய்க்கிழமை (03) இடம்பெற்றுள்ளது .
அவர் தனது மனைவியை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வருமாறு வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன் பின்னர் பொலிஸார் அவரை மரத்திலிருந்து பாதுகாப்பாக கீழே இறக்கி விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர் .
மேலும் , குறித்த நபர் மரத்தில் ஏறியதும் அந்த இடத்தில் ஏராளமானோர் திரண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .