6.61 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்து அதனை வர்த்தகம் செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட 59 வயது நபருக்கு ஆயுட்கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இந்த தண்டனை உத்தரவை பிறப்பித்தார். 2021ம் ஆண்டு கல்கிஸ்சை படோவிட்ட பகுதியில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த நபர் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
நீண்டகாலமாக வழக்கு விசாரணை இடம்பெற்று வந்த நிலையில் சந்தேக நபர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.