தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தேர்தல் பிரசாரங்களுக்கு விலையுயர்ந்த வாகனங்களில் பயணித்தமை தொடர்பில் கருத்து தெரிவித்த தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய, அனுரகுமாரவின் பாதுகாப்பு குறித்து கட்சி சில தீர்மானங்களை எடுக்க வேண்டுமென தெரிவித்தார்.
இந்த நாட்டின் ஜனாதிபதியாக வரவுள்ள NPP ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்கவின் பாதுகாப்பை NPP உறுதிப்படுத்துவது முக்கியம் என அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
அநுரகுமார V8 போன்ற விலையுயர்ந்த வாகனங்களில் தேர்தல் பிரசாரக் கூட்டங்களுக்கு செல்வதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளித்த பாராளுமன்ற உறுப்பினர், NPP பொது பணத்தை தவறாக பயன்படுத்தவில்லை என்றும் அதற்கான செலவை கட்சியே ஏற்கிறது என்றும் கூறினார்.
“மக்கள் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைப்பார்கள். பொது பணத்தை நாங்கள் தவறாக பயன்படுத்தவில்லை. அனுரவின் பாதுகாப்பு எமக்கு முக்கியம். அனுரகுமாரவின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு சில தீர்மானங்களை எடுக்கின்றோம்.அந்த தீர்மானங்கள் மக்களுக்கு சுமையல்ல.
இந்த நாட்டின் ஜனாதிபதியாக வரவிருக்கும் அநுரகுமார திஸாநாயக்கவின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது எமக்கு முக்கியமானதாகும். அதற்கான முடிவுகளை மேற்கொள்வோம் என அவர் கூறினார்.