பிறப்பு சான்றிதழுக்கு பதிலாக இறப்பு சான்றிதலுக்கான விண்ணப்ப படிவத்தை வழங்குவதால் மக்கள்
அசௌகரியத்திற்கு உள்ளாகியுள்ளனர். சம்பவமானது நுவரெலியா பிரதேச செயலாளர் அலுவலகத்தில் பதிவாகியுள்ளது.
ஒரு மாதத்திற்கும் மேலாக இவ்விடயம் இடம்பெறுகிறது . அதில் சிங்கள மொழியில் இறப்பு என குறிப்பிடப்பட்ட சொல்லை வெட்டி விட்டு அதற்கு பதிலாக ஆங்கில மொழியில் Birth என எழுதப்பட்டு காணப்படுகிறது. இதனால் தமிழ் மொழி மாத்திரம் தெரிந்தவர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.