ஜனாதிபதி தேர்தலில் ஒரு வேட்பாளருக்கு மாத்திரம் வாக்களிப்பதாயின் வெட்டு அடையாளத்தையும் விருப்பு வாக்குகளை வழங்குவதாயின் ஒன்று, இரண்டு, மூன்று என இலக்கங்களை பதிவிட வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்கழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டுக்கள் தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் 4ம், 5ம் மற்றும் 6ம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு இடம்பெறவுள்ளது.