கிளப் வசந்தவின் படுகொலை சம்பவம் தொடர்பில் கைதான மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அமல் சில்வா எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 29ஆம் திகதி காலை அமல் சில்வா கைது செய்யப்பட்டு பின்னர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
கொலையை செய்ய வந்த நபர்களுக்கு தங்குமிட வசதி மற்றும் ஆதரவை வழங்கிய குற்றச்சாட்டின் கீழ் மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டார்.
கடந்த ஜூலை மாதம் 8 ஆம் திகதி அத்துருகிரி நகரில் கிளப் வசந்த என்பவரை சுட்டுக் கொன்றதற்காக பொலிஸாரால் தேடப்பட்டு வந்த துப்பாக்கிதாரி மற்றும் காரின் சாரதி ஆகியோர் கடந்த 28 ஆம் திகதி இரவு பாணந்துறை குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.
சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த முன்னாள் மாகாண சபை உறுப்பினரை கைது செய்ய முடிந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.