அநுராதபுர மாவட்டத்தில் ட்ரகன் பழ உற்பத்தி மிகவும் வெற்றிகரமாக மேற்கொள்ளக் கூடியதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் தற்போது இந்த ட்ரகன் பழ உற்பத்தி பரவலாக செய்கை பண்ணப்பட்டு வருகின்றது. உலர் கால நிலை ட்ரகன் பழ மரங்களுக்கு ஈடுகொடுப்பதாலும், குறைந்த உழைப்புப் பயன்படுத்தப்படுதல், குறைந்த கிருமி, பூச்சிகளின் தாக்கம் மற்றும் கிருமி நாசினி, பசளை உபயோகம் போன்றவற்றுடன் சந்தையில் அதிக கேள்வி மற்றும் விரும்பத்தக்க சிறந்த விலை காணப்படும் உற்பத்தி என்பதாலும் ட்ரகன் பழங்களின் உற்பத்தி மாவட்டத்தில் அதிகரித்துள்ளது.
அவ்வாறே ட்ரகன் பழ செடிகள் மேடைப் பயிராகவும் வீட்டுத் தோட்டப் பயிராகவும் செய்கைபண்ணப்படுகிறது. இதனால் ஜேம், ஜெலி, பழச்சாறு மற்றும் வைன் போன்ற பெறுமதி சேர் உற்பத்திகளும் தற்போது அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அத்துடன் சிலர் ட்ரகன் மரத்தின் பூவை கறியாக உணவில் சேர்த்துக் கொள்கிறார்கள். இப்பழம் புற்றுநோய்த் தடுப்பு, நீரிழிவைக் கட்டுப்படுத்தல் போன்றவற்றுடன் நிறை உணவாக இரத்தத்தில் கொலஸ்ரோலின் அளவு மற்றும் குருதி அழுத்தத்தை கட்டுப்படுத்துவதற்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுதல் இப்பழத்திற்கு அதிக கிராக்கியை ஏற்படுத்தியுள்ளது.