இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
பாத் பைன்டர் அமைப்பின் ஸ்தாபகர் மிலிந்த மொரகொடவை இன்று காலை இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் சந்தித்துள்ளார்.
இதன்போது இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் உத்தேச திட்டங்கள் அடங்கிய அறிக்கையை இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் வழங்கியுள்ளார்.
வீதி, ரயில் மார்க்கம், மின்சாரம் மற்றும் எரிபொருள் ஆகிய பிரிவுகளின் கீழ் இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையே நேரடி தொடர்புகளை ஏற்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.