பாதாள உலக கும்பலைச் சேர்ந்த விதானகே தொன் கீத்மால் பெனோய் தில்ஷான் என்பவர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் துபாயில் வைத்து கைது செய்யப்பட்டு இன்று வியாழக்கிழமை (29) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
33 வயதுடைய “கீத்மால் பெனோய் தில்ஷான் ” கொலை, கப்பம் கோரல் மற்றும் போதைப்பொருள் விற்பனை உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவராவார்.
“கீத்மால் பெனோய் தில்ஷான் ” பாதாள உலக கும்பலின் தலைவரான “மத்துகம ஷான்” என்பவரின் முக்கிய உதவியாளர் ஒருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
“கீத்மால் பெனோய் தில்ஷான் ” குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் துபாயில் வைத்து கைது செய்யப்பட்டு இன்றைய தினம் அதிகாலை 05.05 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
இந்நிலையில் , “கீத்மால் பெனோய் தில்ஷான் ” மேலதிக விசாரணைகளுக்காக மத்துகம தலைமையக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.