இம்மாதம் 16ஆம் திகதியன்று திருகோணமலை, ஸ்ரீபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கம்மம்பில கிராமத்தில் வயல் காவலில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
சந்தேகநபர் கந்தாவின் செயலாளர் கயான் சுகததாச என்ற நபர் எனவும் அவர் அவிசாவளை சமருகம இலக்கம் 87 ஐ வசிப்பிடமாகவும் கொண்டுள்ளார்.
சந்தேக நபர் தற்போது பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்
அவரை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோருகின்றனர்.
அவரைப் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால், அந்தத் தகவலைத் தெரிவிக்கும் வகையில் தொலைபேசி எண்ணையும் பொலிஸார் வழங்கியுள்ளனர்.
அதன்படி, அந்த தொலைபேசி எண்கள் கீழே உள்ளன
* 071 859 1181 அல்லது 025 225 5062 என்ற தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
* சந்தேக நபரின் தேசிய அடையாள அட்டை இலக்கம் ; – 850220751V , 198502200751