மொரட்டுவை பிரதேசத்தைச் சேர்ந்த டெங்கு கட்டுப்பாட்டு உதவியாளர்கள் மற்றும் 4 பொதுச் சுகாதார பரிசோதகர்கள் அடங்கிய குழுவினர் நேற்று நீராட சென்ற நிலையில் 02 பொது சுகாதார பரிசோதகர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
களுத்துறை, எத்தாவெடுனுவெல என்ற இடத்தில் சம்பவம் இடம்பெற்றுள்ளது
இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.