பாராளுமன்றில் தோழர் 30 நிகழ்வில் தமிழ் மக்கள் கூட்டணியின் மாவட்ட அமைப்பாளரும் ஓய்வுபெற்ற அதிபருமான ஆறுமுகம் ஆளாழசுந்தரம் EPDPயுடன் இணைந்தார்.
குறித்த நிகழ்வு இன்று (25) பற்பகல் 3 மணியளவில் கிளிநொச்சியில் உள்ள தனியார் விருத்தக மண்டபத்தில் இடம் பெற்றது.
1994 ஆம் ஆண்டு பாராளுமன்றத்துக்கு தெரிவான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் 30 வருட தொடர்ச்சியான சேவையை பாராட்டும் வகையில் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
முன்ளால் வடக்கு மாகாண சபை உறுப்பினர் வை. தவநாதன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.