அண்மையில் மன்னார் வைத்தியசாலையில் உயிரிழந்த இளம் தாய் சிந்துஜாவின் கணவர் நேற்று இரவு தவறான முடிவெடுத்து அவரது சொந்த ஊரான வவுனியா பனிக்கர் புளியங்குளத்தில் மரணமடைந்துள்ளார்.
மன்னார் வைத்தியசாலையில் அண்மையில் சிந்துஜா குழந்தை பெற்ற நிலையில் சில நாட்களின் பின்னர் அதிக இரத்த போக்கால் மீண்டும் மன்னார் வைத்தியசாலைக்கு சென்ற போது அங்கு வைத்தியசாலை ஊழியர்களால் கவனிக்கப்படாத நிலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு பெரும் சர்ச்சை ஏற்பட்டு இருந்தது.
இந்த நிலையில் நேற்றைய தினம் இரவு தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த நிலையில் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.