மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி வேட்பாளருமான டாக்டர் ஐதுருஸ் முஹம்மது இல்யாஸின் பெயர் வாக்குச்சீட்டிலிருந்து நீக்கப்பட மாட்டாது என தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி வேட்டபாளர் இல்யாஸ் திடீரென சுகயீனமடைந்து புத்தளம் தள வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில், நேற்றுமுன்தினம் (22) காலமானார். அன்னாரின் ஜனாஸா நேற்று (23) புத்தளம் பகா முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.