காற்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) தனது யூடியூப் கணக்கை ஆரம்பித்த 12 மணிநேரங்களில் 10 மில்லியன் பாவனையாளர்கள் அதனை பின்தொடர்ந்துள்ளனர்.
இவ்வாறு குறுகிய நேரத்தில் 10 மில்லியன் பாவனையாளர்கள் ஒரு கணக்கை பின்தொடர்ந்துள்ளமை இதுவே முதல் தடவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது யூடியூப் கணக்கை ‘யுர் கிறிஸ்டியானோ’ (UR.Cristiano) என்ற பெயரில் நேற்றையதினம் (21.08.2024) தொடங்கியிருந்தார்.
குறித்த கணக்கின் மூலம், ரொனால்டோவை 90 நிமிடங்களில் 1 மில்லியன் பாவனையாளர்களும் 6 மணிநேரங்களில் 6 மில்லியன் பாவனையாளர்களும் 12 மணிநேரங்களில் 10 மில்லியன் பாவனையாளர்களும் பின்தொடர்ந்தனர்.
இதேவேளை, யூடியூப் கணக்கொன்றில் அதிக பின்தொடர்வோர்களை கொண்ட கணக்காக மிஸ்டர் பீஸ்ட்டின் (MrBeast) கணக்கு (311 மில்லியன்) உள்ளது. இதனையும் வெகு விரைவாக ரொனால்டோ முறியடிப்பார் என்றே தற்போது கூறப்படுகின்றது.