போஸ்னியா நாட்டில் உள்ள பாடசாலையொன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
வடமேற்கு போஸ்னியா- ஹெர்சகோவினாவில் உள்ள சான்ஸ்கி மோஸ்டில் உள்ள ஒரு பாடசாலை வளாகத்தில் நேற்று (21) பாடசாலை ஊழியரொருவர் சக ஊழியர்கள் மூன்று பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதையடுத்து, குறித்த பாடசாலை வளாகத்தை பொலிஸார் சுற்றி வளைத்துள்ளனர்.
மேலும், துப்பாக்கிச்சூடு நடத்திய நபர், தன்னைத் தானே சுட்டுக் கொண்டுள்ளார். எனினும், மார்பில் காயம் பட்ட அவரை மீட்டு சிகிச்சைக்குக் கொண்டு சென்றுள்ளனர்