மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஜயந்த டி சில்வா தனது 78ஆவது வயதில் இன்று காலை (21) காலமானார்.
தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து தீவிர அரசியலில் பிரவேசித்த ஜயந்த டி சில்வா, கொழும்பு மாநகர சபையின் மாநகர சபை உறுப்பினராகவும், மேல் மாகாண சபை உறுப்பினராகவும் மூன்று தசாப்தங்களாக பொதுச் சேவையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.