சீரற்ற காலநிலை காரணமாக 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, காலி, களுத்துறை, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கே குறித்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக இந்த இடங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், மக்களை பாதுகாப்பாக இருக்குமாறும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.