சுரேந்திர வசந்த பெரேரா என அழைக்கப்படும் கிளப் வசந்த உள்ளிட்ட இருவரை சுட்டுக் கொலை செய்து மேலும் நால்வரை காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பெண் உட்பட 11 சந்தேகநபர்கள் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, சந்தேகநபர்களை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபர்கள் இன்று (20) கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சந்தேகநபர்கள் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.