வரலாற்றுச் சிறப்புமிக்க தலதா பெரஹராவை பார்வையிட மக்களுடன் ஜனாதிபதி இணைந்துகொண்டார்.
கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹராவின் இறுதி ரந்தோலி பெரஹரா திங்கட்கிழமை (19) இரவு நடைபெற்றதுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் ஆயிரக்கணக்கான மக்களுடன் இணைந்து பெரஹராவைக் கண்டுகளித்தார்.
பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, அமைச்சர் பந்துல குணவர்தன, இராஜாங்க அமைச்சர்களான அனுராத ஜயரத்ன, திலும் அமுனுகம, லொஹான் ரத்வத்தே, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோர் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.