அதிக இரைச்சலுடன் பயணித்ததாக கூறப்படும் 20 மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
குருணாகல் – தம்புள்ளை வீதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. விசாரணையில் இலக்கத்தகடுகள் போலியானது என பொலிஸ் தெரியவந்துள்ளது.
இந்த மோட்டார் சைக்கிள்களின் மொத்த பெறுமதி சுமார் 4 கோடி ரூபாவிற்கும் அதிகம் என பொலிஸார் தெரிவித்தனர்.
பூகொடையிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள்களே இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மோட்டார் சைக்கிள்களின் உரிமையாளர்கள் தெரிவிக்கையில்,
சேருவாவில பிரதேசத்தில் உள்ள சுமார் 60 மாணவர்களுக்கு பாடசாலை சீருடை மற்றும் புத்தகப் பைகள் உள்ளிட்ட பல்வேறு கற்றல் உபகரணங்களை வழங்குவதற்காக நாங்கள் சென்று கொண்டிருந்தோம். எங்களிடமிருந்த கற்றல் உபகரணங்களையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
இதனால், நாங்கள் மாணவர்களுக்கு செய்யவிருந்த சேவையையும் இடைநிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குருணாகல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.