USS Spruance என்ற அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான கப்பல் இன்று (19) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக கடற்படை தெரிவித்துள்ளது.
சுமார் 160 மீற்றர் நீளம் கொண்ட இந்த கப்பலில் மொத்தம் 338 பேர் பயணிக்க முடியும் என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
விநியோக மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்த பின்னர் நாளை (20) இந்த கப்பல் நாட்டை விட்டு புறப்பட உள்ளது.