களுத்துறை, தியகம பிரதேசத்தில் 12 வயது சிறுமி ஒருவரை பலமுறை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஐவரும் இந்த சிறுமியின் குடும்ப சூழ்நிலையை பயன்படுத்தி பொருட்கள் மற்றும் பண உதவிகளை வழங்குவதாக கூறி சுமார் இரண்டு வருட காலமாக குறித்த சிறுமியை பலமுறை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 70 வயதுடைய முதியவர் ஒருவரும் காணப்படுவதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை வடக்கு பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.