தணமல்வில மாணவி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான மருத்துவப் பரிசோதனையை மேற்கொண்ட ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையின் சட்ட வைத்தியர், மாணவியை குற்றவியல் வற்புறுத்தல் செய்த குற்றச்சாட்டின் பேரில் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினரால் நேற்று (17) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சட்ட வைத்தியரை ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவருக்கு 300,000 ரூபா பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய 21 பாடசாலை மாணவர்கள் விளக்கமறியலிலும் சிறுவர் நன்னடத்தை பிரிவிலும் வைக்கப்பட்டுள்ளனர்.