நடிகர் ஷாருக்கான், தான் ஒரு நேரம் மட்டுமே உணவு உண்பதாகத் தெரிவித்திருப்பது, அவரது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இதுபற்றி அவர் கூறியது,
‘காலை 5 மணிக்குத்தான் தூங்கச் செல்வேன். படப்பிடிப்பு இருந்தால் காலை 9 அல்லது 10 மணிக்கு எழுந்து விடுவேன். முன்னதாக வேலை முடிந்து அதிகாலை 2 மணிக்கு வீட்டுக்கு வந்து குளித்துவிட்டுத் தூங்கும் முன் உடற்பயிற்சி செய்வேன். தினமும் ஒரு வேளை மட்டும்தான் சாப்பாடு. அண்மையில் சுவிட்சர்லாந்தில் உள்ள லோகார்னோவில் நடைபெற்ற 77 ஆவது பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றேன். விருதுகள் விஷயத்தில் வெட்கப்படுவதில்லை. அதை வாங்குவது எனக்குப் பிடிக்கும். விழாக்களை விரும்புகிறேன். பேச வேண்டும் என்றால்தான் பதற்றமடைவேன். எனக்கு 9 மாடி அலுவலகம் உள்ளது. ஒவ்வொரு தளத்திலும் விருதுகள் உள்ளன. 300 விருதுகளைக் கொண்ட அறையும் இருக்கிறது. அது கோப்பைகளுக்கான அறையல்ல. ஆங்கில நூலகம் போன்றதுதான். அடுத்து சுஜாய் கோஷ் இயக்கும் ‘கிங்’ என்ற படத்தில் நடிக்கிறேன்.
இவ்வாறு ஷாருக்கான் கூறினார்.