அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார்கள். இருவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் மீது டிரம்ப் சில நாட்களுக்கு முன்பு இனவெறி கருத்தை தெரிவித்தார். கமலா ஹாரிஸ் எப்போதும் இந்திய பாரம்பரியத்தை உடையவர். தற்போது கருப்பினத்தவராக அறியப்பட விரும்புகிறார்.
இதனால் அவர் இந்தியரா அல்லது கருப்பினத்தவரா? என்பது எனக்கு தெரிய வில்லை என்று கூறி இருந்தார்.
இந்த நிலையில் கமலா ஹாரிஸ் மீது டிரம்ப் மீண்டும் சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார்.
பென்சில்வேனியாவில் நடந்த பிரச்சார கூட்டத்தில் டிரம்ப் பேசும்போது, நான் கமலா ஹாரிசை விட அழகாக இருக்கிறேன். “நான் அவரை விட நல்ல தோற்றமுடையவன். டைம் இதழின் அட்டையில் ஹாரிசின் விளக்கப்படம் எனக்கு அதிருப்தி அளித்தது.
நான் அவரை விட அழகாக இருக்கிறேன். அவர் சிரிப்பதை நீங்கள் கேட்டீர்களா? அது ஒரு பைத்தியக்காரனின் சிரிப்பு. ஜோபைடனை விட கமலா ஹாரிசை தோற்கடிப்பது எளிதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன் என்றார்.