இந்தியாவுடனான உறவை மேலும் வலுப்படுத்திக் கொள்வதில் விசேட கவனம் செலுத்தி, ஜப்பான் முதல் இந்தியா வரையான பொருளாதார ஒத்துழைப்பையும், பிராந்தியத்தை ஒன்றிணைத்து வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
‘நிலையான எதிர்காலத்திற்கான வலுவான உலகின் தென்பிராந்தியம்” என்ற தொனிப் பொருளில் மூன்றாவது முறையாக நடத்தப்பட்ட ‘உலகின் தென்பிராந்தியத்தின் குரல்’ என்ற அரச தலைவர்களின் மாநாட்டில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.