ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீரவின் முதலாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது. இன்று முற்பகல் யாழ்ப்பாணத்தைச் சென்றடைந்த அவர் முதலில் ஸ்ரீ நாக விகாரைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.
நிகழ்வில் சர்வஜன கூட்டணி கட்சியின் தலைவர்களும் கலந்துகொண்டனர். அதனைடுத்து யாழ் ஆயர் இலத்திற்கு சென்ற திலித் ஜயவீர யாழ் ஆயர் இல்லத்தின் உப தலைவர் அருட்தந்தை பீ.ஜே. ஜெபரத்தினம் அடிகளாரை சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது கட்சியின் இரண்டாவது தேர்தல் விஞ்ஞாபனத்தை அருட்தந்தையிடம் கையளித்தனர். யாழ் மொஹைதீன் ஜூம்மா பள்ளிவாசலுக்கும் அவர் சென்றிருந்தார். யாழ் நல்லூர் கோவிலுக்கும் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.