நேபாளத்தின் இமயமலைப் பகுதியில் பனிப்பாறையொன்று உருகியதில் அங்கிருந்த கிராமமொன்று பனி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. எவரஸ்ட் வலயத்தின் ஷர்பா பிரதேசத்தில் இந்த கிராமம் அமையப்பெற்றுள்ளது.
இமயமலைப் பகுதியில் சுமார் 3600 மீற்றர் உயரம் கொண்ட பாரிய பனிப்பாறையொன்றின் உடைந்து வீழ்ந்தில் வெள்ளம் ஏற்ப்பட்டது. சம்பவத்தில் இடம்பெற்ற உயிர்ச் சேதங்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.
எனினும் வெள்ளத்தால் பாடசாலைகள், சுகாதார சிகிச்சை நிலையங்கள் வீடுகள் என பல இடங்கள் முற்றாக அழிவடைந்துள்ளன. காலநிலை அனர்த்தங்கள் காரணமாக இமயமலைப் பகுதியில் பாரிய பனிப்பாறைகள் உருகும் நிலை அதிகரித்துள்ளதாக துறைசார் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.