தனது கடையில் பணிபுரிந்த ஊழியரைத் தாக்கிக் கொலை செய்த குற்றச் சாட்டில் வெள்ளவத்தை பிரதேசத்தை சேர்ந்த 42 வயதான நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தனிப்பட்ட தகராறே குறித்த கொலை சம்பவம் இடம்பெறுவதற்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உயிரிழந்தவர் கொழும்பு -13, ஜம்பட்டா தெருவில் வசிக்கும் 46 வயதுடைய நபர் எனவும், அவரது சடலம் தற்போது களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.