ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கல்முனைப் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 30 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கல்முனை விசேட அதிரடிப்படையின் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய கல்முனையில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து நேற்று (16) மாலை சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் 36 வயது மற்றும் 49 வயது மதிக்கத்தக்கவர்களெனவும் நீண்ட காலமாக கொழும்பிலிருந்து கல்முனைக்கு போதைப்பொருட்களை கடத்தி வந்துள்ளனர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கல்முனை விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்து வருகின்றனர்.