நாடு தற்போது இயல்பு நிலையில் இருப்பதாக ஜனாதிபதி கூறினாலும், நாட்டில் உருவாகியிருப்பது புதியதொரு நிலையாகும். இதனால் நாட்டு மக்கள் தொழில்களை இழந்து, ஜீவனோபாயத்தினை இழந்து வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மக்களின் நுகர்வு, முதலீடு, சேமிப்பு மற்றும் உற்பத்தி ஆகியவை இல்லாமால் போயுள்ள காரணத்தினால் நாட்டின் ஏற்றுமதி பாரியளவு வீழ்ச்சியடைந்துள்ளது. இக்காரணத்தால் நாட்டின் புதியதொரு இயல்புநிலை உருவாகியுள்ளதென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
மக்களின் வாழ்வாதாரத்தை குறைத்து , பணத்தினை சட்டைப் பைகளில் அடைத்து, செலவழிக்க முடியாதொரு நிலை உருவாகியுள்ளது. நாட்டை நாசமாக்கி, அதளபாதாளத்திற்கு கொண்டுசென்றுள்ள ஒரு சாதாரண நிலையே நாட்டில் நிலவி வருகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.
கண்டி மல்வத்த மற்றும் அஸ்கிரி பீட மகா நாயக்க தேரரை இன்று (16) சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டதன் பிற்பாடு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.