மின்னேரியா யோத வாவியில் விழுந்து பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக மின்னேரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இறந்தவரின் அடையாளம் குறித்து எதுவும் கண்டறியப்படாத நிலையில் அங்குள்ள மக்கள் அனைவரும் குறித்த பெண் ஒரு யாசகர் என பொலிஸாரிடம் கூறிப்பிட்டுள்ளனர்.
மின்னேரியா நகருக்கு அருகிலுள்ள யோத வாவியில் தவறி விழுந்து, இரண்டு கிலோமீட்டர் தூரம் அடித்து செல்லப்பட்ட போது மின்னேரியா பொலிஸ் உயிர்காக்கும் படையினரால் குறித்த பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மீட்கும் போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகவும், உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.