மக்கள் போராட்ட இயக்கத்தின் முதலாவது ஜனாதிபதி தேர்தல் பொதுக்கூட்டம் நுகேகொடை ஆனந்த சமரகோன் வெளியரங்கில் இடம்பெற்றது. நிகழ்வில் முன்னிலை சோசலிச கட்சி, மக்கள் போராட்ட இயக்கம் மற்றும் போராட்டக் குழுக்களுடன் தொடர்புடைய தரப்பினர் கலந்துகொண்டனர்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாதொழித்து அரச நிர்வாகத்தில் பொதுமக்களின் பங்களிப்பை பெறுவம் வகையிலான ஆட்சி முறை உருவாக்கப்படுமென கூட்டத்தில் உரையாற்றிய மக்கள் போராட்ட இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளர் நுவன் போககே தெரிவித்தார்.